மகள்

வெண்ணிலவே வீதியில் வந்ததுவோ...
கையிலே சுமந்தது யாரோ...
நெஞ்சிலே சுமக்கிறேன் நாளுமே...

கொடி முல்லை இவள் என்றே தான்...
கொய்து சென்றதுவோ காலனுமே...

வானத்து மீனிரண்டு இவள் கண்களானதுவோ...
கைகளில் ஏந்திடும் மலர் தான் இவளே...

கடல் போர்த்திய பூமியிலே
உடலை போர்த்த வந்தவளே...
உனக்காகவே வாழ்ந்திடவே
உயிரும் தானாய் இசைக்கிறதே

உடலுக்கும் உயிருக்கும்
என்ன உறவோ
ஒன்றில்லாமல் ஒன்று
வாழ்ந்திடுமோ

உயிரே உயிரே
உன்னை காணத் தானே கண்களும்...
உனக்காகத் தானே என் உயிரும்...

மனதுக்கு பிடித்தது மாய வலை
எந்தன் மாயமே...
மறைந்து போய் விடாதே
மறைந்து போனாலும்
மறந்தும் போகாதே எந்தன் பாச வலை

ஓடும் நதி நீரும் நிற்காது
ஆடும் சிவனும் ஓயாது
நான் உன் மீது வைத்த பாசம் முடியாது
என் கண்மணியே...
என் பூமகளே...

மழைத்துளி மண்ணை தொட்டுப்போகுதே
உந்தன் கண்ணீர்த்துளி நெஞ்சை உரசிப்பார்க்குதே

வசந்த காலத்தின் வான் முகிலே...
வண்ண மலரே...
வாடாத தளிரே...
மார்கழி வாடையும்
கோடை வெயிலும்
நீயே தானே.....
உயிரே...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Dec-16, 7:48 am)
Tanglish : magal
பார்வை : 5448

மேலே