உனக்கும் சேர்த்தே எழுதுகிறேன்

உனக்கும் சேர்த்துதான்
மேடையில் அமர்ந்திருந்தேன்
என்னை விட்டு விட்டே பார்வையாளராய்
அமர்ந்திருந்தாய் நீ....
புதிர் உன் பக்கம் திறக்க
என் பக்கம் இலையுதிர் கவிதைகள்...
நீ பார்க்காத போதெல்லாம்
பாதி கவிதையிலேயே அமர்ந்திருந்தேன்...
பார்த்த போதோ
மீதி கவிதைகளையும் மறந்திருந்தேன்...
அத்தனை அழுத்தத்தோடு
நீ இருந்திருக்க வேண்டாம்...
உயிரோடு நான் இறப்பதை
சற்று நேரத்துக்காவது தள்ளி
வைத்திருக்கலாம்....
அடுத்த மேடைக்கும் வா..!
ஒவ்வொரு மேடையிலும் என்னை
பிணமாக்கி விட
உன்னால் முடிகிறது....
உன் புன்னகை நொடிகளை
நான் அள்ளி வரவுமில்லை...
உன் அசட்டுக் கனவுகளை
நான் தள்ளி விடவும் இல்லை...
வருடம் ஒரு புத்தகம்
நான் போட வேண்டும் என்று
சொன்னவளா நீ.....?
ஆச்சரியக் குறியோடு கொஞ்சம்
அழுதும் பார்த்தது வருடிய உன் எதிர்...!
நிச்சயமாக தெரியவில்லை
எனக்கோ என் பெயருக்கோ அல்லது
என் கவிதைக்கோ விழுந்த
கை தட்டல்களில்
உன் கை ஓசை கொஞ்சமேனும்
ஒட்டியிருந்தால் நிகழ்வு சுபம் தானென்று....!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Dec-16, 8:12 pm)
பார்வை : 146

மேலே