மழைக்கோர் காதல் மடல்
நீளநெடுஞ்சாலையில்- என்
தனிமையோடு கை கோர்த்து
மழையோடு கதை பேசி
இடியோடு இசை பாடிட ஆசை..!!
ச்சளக் ச்சளக்... என
என் கால்கொலுசும் மழை நீரும்
உறவாடும் உரசல்கள் கேட்டிட ஆசை...!!
கைவீசி தூறலின் மேனி வருடிட ஆசை...!!
நனைந்த கூந்தல் விரித்து
சொட்டுகின்ற நீரால்
மழைக்கோர் மடலியற்றிட ஆசை...!!
இரு இதழ்களுக்கு மத்தியில்
மழைக்கோர் மெத்தையிட ஆசை...!!
இமை மயிரில் மழை கோர்த்து
விளையாடிட ஆசை...!!
என் கற்பனையில் மழைகுழைத்து
கவிமழை தீட்டிட ஆசை...!!
மழையே என் மடலேற்பாயா...??
உன்மீதுள்ள என் காதலுக்காய்...!!??
##சிவனிறைச்செல்வி