Sivaniraichelvi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sivaniraichelvi |
இடம் | : |
பிறந்த தேதி | : 25-Jun-1997 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 13 |
#சர்வம் சிவார்ப்பணம்#
வெள்ளிக்கிழமை மாலை ஆறரை ரயிலை பிடித்த பின்னர் எனை வருடிய ஜன்னலோர காற்றின் வசைகளுக்கு நான் செவி மடுக்கவில்லைதான் ...."கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி"என்ற சுதா ரகுநாதனின் குரலில் மெய்மறந்த என் செவிகளுக்கு காற்றின் வசைகளை கேட்க எப்படி விருப்பமிருக்கும்...!!!ரயிலின் நெடுந்தூர ஓட்டத்தொடு ஈடுகொடுக்க ரொடங்கின எனதிதிய துடிப்புகள்....கர்நாடக சங்கீதம்...காலக்ஷேமம் என்று இக்கலைகளில் ஆர்வமிருப்பினும் சிறுவயது முதல் சரிவர பயிற்சி மேற்கொள்ளாமல் போனதற்கு நான் காரணமா...இல்லை பெற்றோரின் அலட்சியமா...இல்லை என் துரதிர்ஷ்டமோ ...?? என்ற என் மனதவழித்து விட்ட அடுக்கு மொழிக் கேள்விகட்கு என்ன
நிலவின் மீதுள்ள காதலால்
கம்பனாகும் காற்றில் மூச்செடுத்து
என் நுரையீரல் பூசிக்கிடந்தேன்...
முதலிரவுப் பெண்ணாகி
இரவோடு மறைந்தவொரு
முகிலைப் பிய்த்தெடுத்து
குளிருக்கு போர்வையிட்டேன்....
இரவுப்பனி நிதஞ்சேர்த்து
பேனா மை ஆக்கி
பேயிருளை பார்த்திருந்தேன்...
ஏனோ....
அந்தரங்க வேளையிலே
அல்லிடுக்கின் ஆழத்திலே
ஏதோவோர் தெரு நாயின்
ஆற்றாத ஓலத்திலே
விட்டில் குடித்த விளக்காய்
அணைந்தணைந்து முழித்திருந்தேன்..
சில்லென்ற மலைக்காற்றில்
துகிலுறித்த மலர்கண்டு
திரிகதை பேசிய சருகோசைகள்
மட்டும் இரவோடு உறவாடியது
கண்டு பேந்த விழித்திருந்தேன்...
தீண்டாமற் தீண்டிப்போகுந்
தென்றலின் முகவரி தே
நீள நெடுஞ்சாலை
நீளும் விழிச்சோலை
நாளும் நாடுகின்றேன்
நடு இரவில் தொலைத்த இதம்
நடுங்குகிறேன் நீ இன்றி
நடுக்கத்தை நீ ஒடுக்க
விடுக்கின்றேன் உயிர் விடுப்பு###
என் வரிகள் கவிதையாயின
என் முணுகள்கள்
பாடலாயின
என் விடியல்கள் நிலவிலாயின
என் நாழிகள் நமுத்து போயின
என் நாடிகள் நட்டமிட்டன
என் நாளங்கள் சுண்டி போயின
என் கற்பனை காதலுக்கே
இவ்வளவு வீரியமா....
யாரவன் என்னவன்
எனை முழுக்க ஆளப்போகிறவன்
என் மூச்சை தனதாக்குபவன்
யாரவன்....
யாரென்று அறியாது...
காதலென்ற புதினமியற்றுமிவள்
கண்டிப்பாக முட்டாளாய்
கலை அறியாதவர்க்கும்
காதல் அறியாதவர்க்கும்###
###
என் வானில் முளைத்த
ஒற்றை நிலவே...
உன் பாச ஒளி பட்டு
நாளும் நீளும் விடியல் நான்...
என் கூட்டில் கீச்சிடும்
என் மனக்கிளியே..
உன் மொழியே கேட்டு
வேகுதடி என் ஞாபக பக்கங்கள்...
என்னோடு தோல்வியுறுதில்
பலமுறை வென்றவளே....
உன்னை வெல்ல முடியாதடி
என் இளையவளே...
இதயமிலகியவளே...
தாயுள்ளம் ஒன்றில்தான்
காருண்யம் கரையெழுமாம்
என் தாயும் நீதானோ....?
எத்தவமீந்த வரந்தானோ..?
ஒரு தாயின் கருவானோம்...
இப்பிறவி உறவானோம்...
பந்த பாசக் காட்டுக்குள்ளே
பச்சைக் கிளிகளென்றானோம்...
வான் சுமக்கும் மழை நீரில்
மேகங்கள் கரைந்திடுமாம்...
ஊன் சுமக்கும் உயிர் நீரில்
நாமும் கலந்தே பிறந்தோ
🙏🙏🙏
அண்ணாமலையானுக்கு சமர்ப்பணம்
🙏🙏🙏
நிலைகுலைந்து நிலையிழந்து
உயிர் நனைந்து துடிக்கிறேன்...!!
உனை மறந்த நிலைபுரிந்து
எனை மறிக்க நினைக்கிறேன்!!
பித்தா இவள் உன் பக்தை ஆதலால்
இவளை பித்தாக்கலாகாது
புத்தாக்க புத்ரனே!!
நினை நினைந்து..
உனில் நனைந்து …
அடிசேரப் பார்க்கிறேன்!!
விடையேறு வித்தனே!!
சடைபுரியு மெத்தனே!!
கதிரவப் பிழம்பினிலே
காந்தத்தை தோய்த்தெடுத்து ..
தங்கமே சிறிதுருக்கிவிட்ட..
தீப்பிழம்பினிலே தோன்றிட்ட..
தில்லை வாழ் கூத்தனே!!
தொல்லை களை தேசனே!!
என்னுயிர் உடைத்து
உனை வடிக்க
அருள்வாயோ அய்யனே!!
உன்னருள் குடித்து
பிழை உறிக்கும்
பேரருளாய் பேயனே!!
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
அடி தேரடி வீதிதேவதையே
உன் தாவணிக் காற்று தான்
என்னை சுக்கு நூறாக்கி
விட்டுச்செல்லுதடி..!!!
ஏனோ...
உன் தாவணியின் ஸ்பரிசம்
தேரடியோடு மட்டும்
தொலைந்திடுவதேனோ...!!?
இடை உரசும் சிகை அலசி
சொட்டுகின்ற நீரொடு
சுப்ரபாதம் பாடும் துளசிமாடத்
தென்றலே ...
என் வீட்டு துளசிமாடம் உனக்காய் வாடுதடி...!!!
நிலா பிழிந்து மின்னலொடித்து
முகச்சாயலில் சேர்த்திட்டே
இதழவிழ்க்கும் இவளழகில்
இளவழகி என தோன்றிடுமே
அடி அழகின் அமுதசுரபியே...!!!
இலக்கியத் தமிழன் பெண்மையை புனைவதிலே
பேனா முள் தேய்த்தானென்றால்
என்போல் ஓர் தாவணிக் காற்றில்
தன்னுயிர் தொலைத்திருப்பான் போலும்...!!!!
வானவில்லை உருக்கி