யாரவன் என்னவன்

என் வரிகள் கவிதையாயின
என் முணுகள்கள்
பாடலாயின
என் விடியல்கள் நிலவிலாயின
என் நாழிகள் நமுத்து போயின
என் நாடிகள் நட்டமிட்டன
என் நாளங்கள் சுண்டி போயின
என் கற்பனை காதலுக்கே
இவ்வளவு வீரியமா....
யாரவன் என்னவன்
எனை முழுக்க ஆளப்போகிறவன்
என் மூச்சை தனதாக்குபவன்
யாரவன்....
யாரென்று அறியாது...
காதலென்ற புதினமியற்றுமிவள்
கண்டிப்பாக முட்டாளாய்
கலை அறியாதவர்க்கும்
காதல் அறியாதவர்க்கும்###
###

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (3-May-17, 8:25 am)
சேர்த்தது : Sivaniraichelvi
Tanglish : yaravan ennavan
பார்வை : 176

மேலே