தேவதையின் நினைவு

ஏதேனும் சில சமயங்களில்
என் மீது உராயும்
உன் உடம்பின் ஸ்பரிசம்
உன்னருகே நானிருக்கும்
ஒரு சில சந்தர்ப்பங்களில்
என் மேல் படருகின்ற
உன் சுவாசக்காற்று
உறங்கும் நேரம் எல்லாம்
கனவுகளில் வந்து
காதலை சொல்லும் உன் பார்வை
இவை மட்டும் தான் இன்னும் என்னை
இருக்க வைக்கின்றன உயிரோடு....

எழுதியவர் : ஜெயபிரசாத் (22-Dec-16, 11:32 am)
பார்வை : 137

மேலே