என் காதல் தேவதை

அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !
உன்னை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!
உன்னை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !
உன்னை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !
உன்னை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !
உன்னை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !
என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !
கோலி விழி கொண்டு - என்னை
கோலமிட்டு செல்கிறாய் !
பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
என்னை, பேசாமலே வெல்கிறாய் !
விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !
புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !
அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !
உன்னை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !
அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !
உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உன்னை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது!
என் பிரியமானவளே
என் மனதை கவியாக்கி
உயிரை மெய்யாக்கி
உன் உணர்வுகளோடு
வடிக்கிறேன் கவிகளை
உன் அழகைக்
காண்பதற்கு வானத்து
விண்மீன்கள் வெளிச்சம்
விட்டு எரிகின்றன
அவை பொறாமை
தாங்க முடியாமல்
விடிவதற்கு முன்
தற்கொலை செய்கின்றன...
நாளை பூக்கும் ரோஜாவிடம் சொன்னேன்..!
என் தேவதை வரும் முன்பு நீ மலர்ந்து விடாதே என்று..!!
ஏனென்றால்,
உன் அழகை பார்த்து அழகிய ரோஜா வாடி விடும் என்பதால்..!!!
கோவிலில் அழகு சிலைகள் அனைத்தும் அசையாமல் இருக்க..,
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்..!
நீ கோவிலை சுற்றிவரும் போது..!!
எத்தனையோ கவிதை எழுதினேன்
என் கைகள் அலுத்துப் போனது
ஆனால் கவிதை அசரவில்லை
உன் அழகை வர்ணிக்க !!!
வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வழிய வந்து நிற்கின்றன !!!
இறைவன்
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!
நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!
நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது தான் உணர வருகிறது ...!!!
பேசி பேசி கொல்பவள் நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ
நான்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ