திமிர்

அன்பே அழகே
உன் திமிரும் அழகே
சீ என்றாலும் சிலிர்க்குதே
போ என்றாலும் ஈர்க்குதே
புன்னகை கண்டு நெருங்கினால்
எரிகுழம்பாய் நீயும் எரிக்கிறாய்
கோபம் கண்டு விலகினால்
குளிர்நீராய் நீயும் அணைக்கிறாய்
வந்தால் விலகுகிறாய்
விலகினால் வருகிறாய்
முரண்பாட்டு புதையலாய்
சந்தேககோடு சந்தோசகேடு
காதல் என்றும் உன்னோடு
சேர்ந்திடு எந்தன் உயிரோடு
ஏமாற்ற தெரியாதடி
ஏமாறக் கூடாதேன்ற
பயம் உன்திமிரென மின்னுதடி
அன்பே அழகே
உன் திமிரும் அழகே
திமிர் என்ற உன் பயமும் அழகே
ஜெகன் ரா தி