இதயத்தில் விழுந்தவள்
கன்னிப் பருவ காதலி யுன்
மின்னும் இடை தாவணியோ
இன்னும் என்னை ஈர்க்க
எந்தன்,
கடைக்கண்ணே சொக்கிப் போனதடி!
மின்னி வரும் மேனி யுன்னழகில்
எண்ணிப் பார்க்க நேரமில்லை
எத்தனை தருவதென்று இதழ்
முத்தத்தில் முட்டிக்கொள்ளும்...
புது வாசம் வீசி வரும்
உந்தன் இஞ்சி இடுப்பழகில்
அசைந்தாடும் கூந்தலது
பிஞ்சிமொழி பேசிடும் அங்கே
உன் முந்தானை ஊஞ்சலாடி..,
என்ன தவம் செய்ய வேண்டும்
முன்னழகில் ஒன்றான
முகத்தழகை காண நானும்
பத்துமுறை பார்த்தாலும்
புத்தம் புது ஓவியம் நீ
மங்கை என்று உன்னைப்போல்
ஒரு மன்னவனும் கண்டதில்லை
மேகம் பொத்தி வைத்து பிறந்தவளோ!
இல்லை,
பொன்னை புதைத்து வைத்து முளைத்தவளோ!
என்ன ஒரு விந்தை இவள்
இறைவன் கூட கண்டதில்லை
பால்குடம் ஏந்தி வரும்
பாலாடை நான் கண்டேன்!
பஞ்சினை நெஞ்சிலே
பத்திரமாய் வச்சிருக்க
முகத்தில் மிஞ்சிய வியர்வைத் துளி
நதிபோல் விளையாடி போகுதடி..,
நாட்டிய நடையழகி
நான் கண்ட பொன்மேனி உடையழகி
நடமாடும் தேவதை இவள்
இவள் பொற்ச்சிலைநடை காண,
இதயத்தின் விழிகள் இமைக்காமல்
இவள் உலவும் நந்தவனத்தில்
நான் காவலனாய் நின்றிருந்தேன்...
எங்கிருந்து வருவாளோ!
என்னைச் சுற்றி கண்களை
காவலாய் வைத்திருந்தேன்...
புல்லுக்கு போர்வை போல்
இவள் பாதத்தால் முத்தமிட பனி
பொட்டு வைத்த புல்வெளி எல்லாம்
பூ போல மலர்ந்ததடி....
எட்டி நின்று நான் பார்க்க
நான் என்னையே மறந்தேனே
கட்டி வைத்த காதல் என்னில்
காளை போல் துள்ளுதடி...,
- கலைவாணன்