இன்னொரு உயிரின் பக்கங்கள்

இன்னொரு உயிரின் பக்கங்கள்...
..................................................................
வானத்தின் தூரம் போலவே
எனது உயிரின் புன்னகையை
நான் பார்க்கிறேன்...

மெதுவாக எழுந்து நடக்கத்துடிக்கும்
அந்த பாதங்களை நான்
முத்தமிட வேண்டும்....

எனது மனதின் வலிமையை
உடைத்தெறிகிறது அந்த -
ஊமையான நிழல் படம்...

யாராலுமே நிரப்ப முடியாது
என் இருளினை
என் இன்னொரு
உயிரின் புன்னகையைத்தவிர...

அந்த அழகான நினைவுகளை
கடத்திச்செல்லும்
நிமிடங்களுக்கு ஈடாக
இன்னொரு உலகம் செய்தாலும் போதாது....
....................

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (22-Dec-16, 10:05 pm)
பார்வை : 556

மேலே