கஞ்சிக் கலயம் கொண்டு

கஞ்சிக் கலயம் கொண்டு
அன்னத்தின் நடையினிலே
வயலுக்குப் போற பெண்ணே...! தன்னந்தனியாய் நீயும் போக
பயமாகத் தான் உனக்கு இருந்தா
தைரியமா சொல்லு புள்ள
துணையாக நானும் வாறேன்..!

நீ நடக்கும் அழகில் நானும்
மயங்கிப் போறன் புள்ள
உன் அப்பன் ஆத்தா பேர சொல்லு
என் அப்பத்தாகூட நானும் வந்து
உன்னை கைப்பிடித்து கூட்டி போறன் தயக்கமின்றி சொல்லு புள்ள..!

கட்டழகி கண்ணழகி
பொன்னழகி பூவழகி....
இந்த மாமனுக்கு உன் மனச
தந்து விட்டு போடி புள்ள....!

பொன் வேணாம் பொருள் வேணாம்
சீதனம் என்ற வார்த்தை வேணாம்
அன்னக்கிளி நீ தான் வேணும் எனக்கு!

காலம் முழுதும் உன்னை நான்
கண்ணின் மணி போல காப்பேனடி
பயப்படாமல் சொல்லு புள்ள
இந்த மாமன உனக்கு பிடிச்சிருக்கா...?

எழுதியவர் : சி.பிருந்தா (23-Dec-16, 2:35 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 119

மேலே