நன் நாடு நம் நாடு

எந்தையும் தாயும் மகிழ்ந்து...
ஈன்றெடுத்த அன்புச் செல்வங்கள்
இப்பொழுதும் எப்பொழுதும் நற்பிள்ளைகளாய் வாழ்ந்திடுவோம் மண்ணிலே...!

அன்னை ஊட்டிய பாலிலும்
தந்தை சொன்ன கதையிலும்
மிகுந்திருப்பது நம் தமிழே..!

எங்கள் தேசம் தமிழ் தேசம்
அந்நியருக்கு நாம் அடிமையில்லை
எம் நாடு அந்நியர் பிடியிலில்லை.!

நிறைந்த நீர் வளம் உண்டு
பரந்த நில வளமும் உண்டு
சிரித்துப் பூத்து குலுங்கும்
வயல்கள் என்ன...?
வருவோரை வரவேற்கும்
வாசனை மிகு மலர்கள் என்ன..?
அனைத்தையும் நிறைவாக கொண்டுள்ளது நம் நாடு..!

சாதி மத பேதமின்றி வாழ
அன்பு என்ற ஒளி போதும்
வெண்புறா பறக்கிறது வானில்
சந்தோசம் பரவுகிறது எங்கும்..!

தாளங்களின் சத்தங்களுடன்
வெற்றி கோசங்கள் எங்கும்
வீரத் தமிழ் மக்களின் குரல்களே
தமிழ் நாடு நன் நாடு நம் நாடு..!

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (24-Dec-16, 12:46 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : nan naadu nam naadu
பார்வை : 250

மேலே