வெண்ணிலவே
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்ணிலவே! வெண்ணிலவே!
வெண்குளிர் வெளிச்சம்
தாராயோ???...
இருட்டினிலே அடர் காட்டினிலே செல்கிறேன்..
வழிதுணையாய் வாராயோ???...
இரவைப் பகலாக்கும் வல்லமை கொண்ட நீயே,
நான் செல்லவே,
உனதொளி வீசி வழி காட்டாயோ???...
வாழ்வில் இருள் காலம் வரும் போதெல்லாம்,
நீ விழித்திருந்தே
அவ்விருள் நீக்காயோ???...
இரவிலும் பூஞ்சோலை காண்கிறேன்,
உனது முழுவடிவொளியாலே...
வெண்ணிலவே!
வாவென்று அழகுத் தமிழால் நான் அழைத்ததும்,
கன்றின் குரல் கேட்டதும்
ஓடி வரும் பசுவாய்,
என் முன் ஒளியாய்
தோன்றிவிட்டாயே....
அமாவாசையன்று காரிருள் என்கிறார்களே,
உனது மெய்யொளியறியா குருடர்கள்....
வழித்துணையாய் நீயே இருக்க, மற்ற துணைகளும் வீண் தானே...
அற்புத ஒளியாய் வழி நடத்தினாய்...
நானும் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்....
நிகரற்ற உனதுதவிக்கு ஈடாய் ஒற்றை வார்த்தையில் நன்றியென்றே நானுமுரைத்தால் தகுமோ???...
எனது நெஞ்சே! என்னை இகழாதோ?...
ஈடிணையற்ற எதிர்பார்ப்பில்லா உனது சேவையை நித்தமும் வேண்டியே,
என்னைப் போல் எண்ணற்ற உயிர்களும்
வாழ்கின்றனவே....
தொடர்வாயாக, உனது மகத்துவம் வாய்ந்த பணியை....