அவளுக்கு என் மேல ஆசை அத காட்ட நெணைக்குது நெலம தடுக்குது
மா நெறத்துக்காரி
மஞ்ச பூசும் குமரி
தொடுத்து வச்ச பூ வாசம்- என்ன தொரத்துதூ...
நச்சத்திர வண்ண கண்ணு- என்ன
மின்னி மின்னி பாக்குது
நா பாக்கும் போது தடுமாறுது...
வந்த வழி பாக்குது- நா
வர்ரேனான்னு பாக்குது.. எ
உருவத்த பாத்தா உற்சாகபடுது..
சேர்தெடுத்த பயணச்சீட்ட
கையில் தர நிணைக்குது
சேர்ந்து வாழ துடிக்குது
கன்டெக்டர் எ பக்கம் வந்தா பயப்படுது...
கண்ணாடி பாக்குது
கண்ண மூடி பாக்குது
கண்ட எ உருவத்த
கதகதையா பேசுதாம்.. காலேஜ் முடுச்சென்ன கல்யாணம் பண்னுதாம்...
மல்லிப்பூ நீட்டுரேன்
வாங்கத்தான் மறுக்குது
மறஞ்சு பாக்குது..
அவ நெலம புரியுது
எப்போதும் அப்பா வரார் அவ கூட...