காதல் -கவிதை

கவிதை எழுதச் சொன்னாய்
நம் காதலையும் எழுதச் சொன்னாய்
இவ்விரண்டும் ஒன்றென அறியாத என் அன்பே !

செல்லச் சண்டைகளால் என்னை ஈர்ப்பது
உன் காதல் என்றால்
உன்னுடைய கடைக்கண் பார்வையானது
என் கவிதை ஆகும் !

உன் முத்தம் உன் காதலனால்
உன் இனிய செவ்விதழ் என் கவிதையாகும்!

என்னை தீண்டுவது உன் காதலனால்
தீண்டும் உன் விரல்கள் என் கவிதையாகும் !

என்னை அரவணைப்பது உன் காதலனால்
அரவணைக்கும் உன் தேகம் என் கவிதையாகும் !

நான் உன் இதயமென்பது காதலனால்
நீ என் கடவுள் என்பது கவிதையாகும் !

என் கவிதை உனக்கு காதலனால்
நீயதை நித்தம் உச்சரிப்பது எனக்கு கவிதையாகும் !

நான் உன் காதலென்றால்
நீ என் கவிதையாவாய்! என்றும்....

எழுதியவர் : விக்னேஷ் பழனி (24-Dec-16, 2:01 pm)
பார்வை : 339

சிறந்த கவிதைகள்

மேலே