சின்னஞ்சிறு உலகம் விட்டே வெளியே வா மனமே

இன்பமொன்றை நீ பெற்றால் அதையே பெரியதென்று துள்ளுகிறாய்...

துன்பமொன்றை நீ பெற்றால் அதையே பெரியதென்று துவண்டுவிடுகிறாய்...

நீ பெற்ற இன்பத்தைவிட பன்மடங்கு இன்பம் பெற்று துள்ளாது அமைதி கொண்டிருக்கும் மனங்களும் ஞானிலத்திலே உண்டு..

நீ பெற்ற துன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு துன்பம் பெற்று துவளாது, அசராது
புன்னகை கொண்டிருக்கும் மனங்களும்
அகிலத்திலே உண்டு...

மொழிப்பற்றால் தமிழனென்று உரைக்கும் மனங்களில்,
சாதி, மதவெறி வேரூன்றியே காணப்படுகிறதே....

தான் மட்டுமே உயர வேண்டுமென்கிறாயே மனமே....
உன்னைப் போன்ற மனங்களின் உணர்வை அறிவாயோ நீ???...

உன் உணர்வே சிறந்தது பெரியதென்று கூற,
நீ உலகிலனைத்தையும் உணரவில்லை என்பதே
நீ உணராத சத்தியமே....

அளவற்ற தூய அன்பு கொள் மனமே...
நீ உணர்ந்த உணர்வுகளே பெரியதென்று,
நீ அறிந்த உலகமே பெரியதென்று இருந்துவிடாதே மனமே...
அவ்வாறிருப்பது மமதையே....
இன்னும் புரியுமாறுச் சொன்னால் மயக்கநிலையே....
அதைவிட்டு வெளியே
வா....

முழு உலகைப் பார்...
ஈடிணையற்ற இயற்கை கூறும் ஆயிரம் உன்னத உணர்வுகள் உணர்...
சின்னஞ்சிறு உலகம் விட்டே வெளியே வா....
சத்தியம் அறி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Dec-16, 4:17 pm)
பார்வை : 618

மேலே