சாதி

"சாதி"
எங்கு தோன்றியது?!
யாரால் தோன்றியது?!
என இன்றுவரை தெரியவில்லை!,

சதியின் பிறப்பிடம் சாதியா?!
இல்லை
சாதி என்பதே ஓர் சதியா?!
என தெரியாயல்
திகைத்து பார்க்கிறேன்
என் நாட்டில்!!!,

இதனை கண்டதால்

சாதியில்லா என் நாட்டில்
எத்தனையோ சாதி கட்சிகள்,

சாதியில்லா என் சமுகத்தில்
எத்தனையோ சாதி பிரிவுகள்,

எங்குமே சாதியில்லை
என்று சொல்லும் என் நாட்டில்
எங்கு பார்த்தாலும் சாதிகள்,

சாதியை ஒழிக்க
எத்தனையோ தலைவர்கள்
போராடினார்கள்
இருப்பினும் ஒழிந்தது
தலைவர்கள் மட்டுமே!!!!


எங்கு தோன்றிது என்றே
வரலாறு தெரியாத சாதி
இன்று
வரலாற்றை படைத்து வருகிறது
என் நாட்டில்.................................
......................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (24-Dec-16, 8:30 pm)
Tanglish : saathi
பார்வை : 104

மேலே