பிறந்தநாள் ஆனந்தம்

மனதுக்கு பிடித்தது
மாறுகிறது
அவ்வப்போது...

மாதங்களில்
மார்கழி...'தை' எனும்
ஓரெழுத்து மாதம்
ஒய்யாரமாய்
உதிக்கும் வரை...

ஊர்களில் சென்னை
மலையழகும்
கடலழகும் வயலழகும்
வாய்த்த திருநெல்வேலி
மாவட்டம் செல்லும் வரை...

மலர்களில்
ரோஜா... மனம்
மயக்கிடும் மல்லிகை
கிடைக்கும் வரை...

கனிகளில்
மாதுளை... மாம்பழம்
வித விதமாய்
ருசிக்கும் வரை...

கோடையில்
கொடைக்கானல்
குற்றால சீசன்
வரும் வரை...

மாறாதவைகளின்
பட்டியலில்
எதுவுமில்லை
மரியதாஸ் ஆனந்த்
போன்ற நட்புக்கள்
மற்றும் உறவுகளின்
மீதுள்ள அன்பைத் தவிர...

மரியதாஸ் ஆனந்த்...
ஆனந்தமயமான
பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள்!

இன்று டிசம்பர் இருபத்தாறு
என்றும் பாயட்டும்
உன் வாழ்வில் மகிழ்ச்சி ஆறு!
வாழ்க பல்லாண்டு!!
👍🎂🙋🏻‍♂🌺🌷🌹🙏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Dec-16, 1:03 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 249

மேலே