கல்லறைக்குள் நான்

கண்ணே உன் காதல் கண்களிலே தெரிகிறதடி
பின் கோப நடிப்பு உனக்கு எதற்கு
பெண்ணே உன் உதடோரம் விரிய துடிக்கும் புன்னகை
நீ உரைக்காமலேயே உன் உள்ளம் உரைக்குதடி
பின் மௌன போர்வை உனக்கு எதற்கு
காதல் பார்வை பரிமாற்றம் போதும்
கல்யாணம் காலம் வேண்டாமா ஏதும்
கன்னியே இந்த காதலனை ஏற்று கொள்
கணவன் மனைவியாய் நாம் இருப்போம்
இல்லை கல்லரைக்குள் நான் இருப்பேன்