ஹைக்கூ 2
மலையில் ஓட்டம்
தடுக்கி விழும் மழைத்துளிகள்
அருவி
.......,..#########.....,.,....,,,,.,,,
தொடர்கிறது
சன்னலோர இருக்கையில்
நிலவு
##############((#((((#########
குளிர்கால தனிமை
அவளையும் சேர்த்து மூடுகிறது
போர்வை
#############################
விற்று தீர்ந்த விளைநிலங்கள்
நியாபகபடுத்துகிறது கிழவி காதில் தொங்கும் தோடு
கிராமம்
#############################
தீபம்
வாசலில் வந்திருக்கிறது
கார்த்திகை
#######################(######
அழும் பிள்ளை
ஒலிக்கிறது பதிவு செய்யப்பட்ட
தாலாட்டு

