ஹைக்கூ 1

பிடிபட்டது நிலவு
உண்ண முடியவில்லை
கொக்கு

#####################

காற்றில் பறக்கும் பட்டம்
ரசிக்க முடியவில்லை
பட்டதாரி

#####################
மரண வீட்டில் பேச்சு
மழை பொழியாத
மேகம்

#####################

தீர்ந்த நாட்காட்டி
பெரிதாய் வருகிறது
பெருமூச்சு

#####################

குழந்தையின் எண்ணம்
அகலாமல் இருக்கிறது
மிட்டாய்கடை

#####################

சப்தமிடாத மரங்கள்
ஆழ்ந்த தூக்கத்தில்
குருவி

#####################

துவட்டாத கூந்தல்
நனைந்து கிடக்கிறது
மேகம்

#####################

ஏற்றத்தாழ்வு
பார்க்காமல் பெய்தது
மழை

#####################

காக்கைகள் அழைப்பு
வந்து சேர்ந்தான்
பிச்சைக்காரன்

#####################

வயோதிகம் அடைந்து விட்டது
முதியோர்
இல்லம்

#####################

கார்மேகம்
துணிகள் எடுக்க
ஓட்டம்

#####################

எறும்புகளின் ஓட்டம்
சந்தேகத்தில்
மழை

#####################

சோப்பு நுரையில்
சிக்கி கிடக்கிறது
வானவில்

#####################

முறிந்த கிளை
ஊசலாடுகிறது
பறவையின் கூடு

#####################

அலார ஓசை
விழித்து எழுந்தது
சேவல்

#####################

அமைதியான தேர்வறை
அடிக்கடி பேசிக்கொண்டது
நாற்காலி

எழுதியவர் : கி.கவியரசன் (27-Dec-16, 11:27 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 119

மேலே