மரணம் வரை நட்பு
நமக்குள் பிறந்த நட்பு
கடலும் கடலலையும்
கண்ணும் இமையும்
உயிரும் மூச்சுக்காற்றும்
போல் பிரியாத நட்பு...
தேனின் சுவை
பூவின் வாசம்
கங்கையின் புனிதம்
தென்றலின் ஸ்பரிசம்
காக்கையின் ஒற்றுமை
குழந்தையின் உள்ளம்
நாயின் நன்றி
இவைகள் நம் நட்பின் அடையாளம்...
நிலவு வளர்ந்து தேயும்
நம் நட்பு வளரும் தேய்வதில்லை
உலகம் மாறிவரும்
நம் நட்பு மாறுவதில்லை
நீரின்றி மீனில்லை
நீயின்றி நானில்லை
மரணம் வரை நம் நட்பு தொடரும்
மரணமே நம் நட்பின் எல்லை...