நினைவுக்கு இல்லை அஸ்தமனம்
நடக்காத நிகழ்வுகளை நிஜங்களாக போராடிகிறேன் நிதம்
வினாடி பொழுதும் உன் நினைவை மறக்காது என் மனம்
விளையாட்டாய் எண்ணி பழகினாய் தினம்
வீசும் தென்றலாய் என் வாழ்வில் வந்தாய் அது இன்ப கணம்
விபரம் கூறாமல் விட்டு சென்றாய் ஆயினும் என்னில் இல்லை சினம்
என்னுள்ளே உதயமாகும் உன் நினைவுகளுக்கு
என்றும் இல்லை அஸ்தமனம்
நான் உன்னை கனவில் கூட மறப்பதில்லை
நீ என்னை நிஜத்தில் கூட நினைப்பதில்லை
காதலை இருவரும் விதைத்து விட்டு
கவலையை நான் ஒருவனே அறுவடை செய்கிறேன்....

