பெண் தமிழ்

பெண் அவள் ஒரு வர்ணிக்க இயலாத சொற்றொடர்.
வாதங்கள் தீராத சொல்பொருள் !
வாழ்க்கைக்கு இனிமையான சுவை பொருள்.
அவள் ஆசைகள் தீராத அடுக்குத் தொடர்!
கோபத்தை குறைத்திடாத இரட்டை கிளவி.
பாசத்தை பாட தவறிடாத பைந்தமிழ் புலவி!
அவன் ஆண்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்ற இலக்கணம்.
சில ஆண்களின் விஷம பார்வைக்கு அர்த்தம் ஆகின்ற இலக்கணப் பிழை!
மொத்தத்தில் பெண் ஊமைகளும்
பேசிடும் ஒரு உன்னதமான மொழி!!
உயர்ந்தோர் உள்ளத்தால் போற்றிடும்
ஒரு அதிசயமான மொழி!!
ஒரு மனதாய் பார் பெண்ணை!
கனவு கவிதைகள் மிதந்திடும் அவள் கண்ணை!
உனக்கு அப்போது தெரியும்!!
பெண் அவள் தான் அழகு எனப் புரியும்!!!...

எழுதியவர் : அரவிந்த் (28-Dec-16, 12:52 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : pen thamizh
பார்வை : 77

மேலே