நடுவில் நட்பு
இருவராலும் இணைந்தே
நிராகரிக்கப்பட்ட
அந்த இரவில்
பகல் வேசம் போடுகிறது
அவளின் விவாதங்கள்...,
விளையாட்டாய்
ஆரம்பித்து வைத்தாள்
உன்னை விட உன்மீது
எனக்கே பாசம் அதிகம் என்று..,
ஒப்புக் கொண்டாள்
நாடகமா என்பாள்
இல்லையெனில்
பிடிவாதம் பிடிப்பாள்..,
மெளனத்தில் நான்!
நெருங்கால உறவினை
நட்பென நீயும்
காதலென நானும்
மனதில் சொல்லிக் கொள்கிறேன்!
தோள் சாய்ந்த
நாட்களும்
பகல் போல் பாவித்த
இரவுகளும்
இன்னும் நீள்கிறது!
அவளின்
மலுப்பலுக்கு...,
சாதியோ, மதமோ
இதற்குள் ஏதோ ஒன்று
கொடியோடு
பின்னப் பட்டிருக்கலாம்..,
அளவீடு இல்லாமலும்
ஒப்பீடு செய்யாமலும்
நானிருக்க..,
இன்றும் அதே
அரிதாரம் பூசி
பரிகாசம் செய்கிறது..,
அவளின் வார்த்தை
இடையில்
மாட்டி விழிக்கிறது
நட்பு!