உணர்வுகளின் உணர்ச்சிகள்..!

நீ....
நீ பொறுமையானவள்
வேதனைகள்
சோதனைகள் வரும் போது
மிக...மிக...பொறுமையாய் இருக்கிறாய்!

நீ அழும் போது கூட
எனக்கு மட்டும் உணர்கிற மாதிரி
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்
அது மாதிரி
மௌனமாயிருப்பது எனக்கு
பிடிக்கிறது தெரியுமா??

என் இதயத்தை
சுவாசமாக
உறிஞ்சி எடுக்கும்
மூச்சு நீ!

நீ - தடவும் போது கூட
எனக்கு மட்டும் சுகமான தென்றல் மாதிரி
உன்னை நேசிப்பது
என் -
உணர்வுகளின் உணர்ச்சிகலாயிற்று
தெரியுமா...?

எனக்கு -
உன்னை பிடித்திருக்கு!
உன் மீது
பைத்தியமாயிருக்கு..............!!

எழுதியவர் : (6-Jul-11, 9:25 pm)
சேர்த்தது : kalaimahel hidaya risvi
பார்வை : 598

மேலே