பூத்திருக்கும் புத்தாண்டு

பூத்திருக்கும் புத்தாண்டு --- மரபு கவிதை --- தரவு கொச்சகக் கலிப்பா .

எழுதியவர் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் .

இப்பாடல் என் சொந்த படைப்பு .

புத்தாண்டு பூத்திருக்குப் புதுமைகளைச் செய்திடவே .
வித்தகனாய் மாறிடலாம் விந்தைபல செய்திடலாம் .
மொத்தமுமாய் நல்வாழ்வு மோகத்தை நீக்கிவிட்டால் .
பத்திரமாய் வந்துசேரும் பாவங்கள் நீங்கிவிடும் .


புகுத்திடுவோம் நன்னெறிகள் புத்தாண்டில் எல்லோர்க்கும்
வகுத்திடுவோம் வாழ்வுமுறை வந்திடுமே நல்வாழ்வு .
பகுத்திடுவோம் செல்வத்தைப் பல்லோரும் பயன்பெறவே .
தொகுத்திடுவோம் கவிதைகளைத் தொடரட்டும் கவியருவி .


பழையனவும் உள்ளதெல்லாம் பட்டினியால் கிடப்பவற்கு
அழைத்துநாமும் தந்திடுவோம் அதுவன்றோ புத்தாண்டு .
உழைப்பவர்கள் நலம்பேண உண்டிங்கு புத்தாண்டு .
பிழைப்புண்டு தாரணியில் பிறர்நலனே மனிதநேயம் .


வறியார்க்கு ஈதலின்றி வருகின்ற செல்வமெலாம்
அறியாமல் மறைக்கின்ற அறிவிலிகள் மனப்போக்கு
உறுதியாக மாறவேண்டும் உலகாளும் வாழ்வுநெறி .
மறுப்பின்றி மக்களுக்கு மலரட்டும் புத்தாண்டு .!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Dec-16, 10:56 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 74

புதிய படைப்புகள்

மேலே