தீவிரவாதி

- தீவிரம் -

*
அங்கே காசு கொடுத்து சிலரை
தீவிரவாதியாக்கினர்,
இங்கே காசு தடுத்து பலரை
தீவிரவாதியாக்குகின்றனர்.

*
காதல் சிக்கலாகும் போது
தீவிரவாதியாகிறான்,
நீர்த்துப்போகையில்
நிராயுதபாணியாகிறான்.

*
அரசியலில் தொண்டன்
தீவிரவாதியாகிறான்,
ஆன்மீகத்தில் முரண்பாட்டிலும்
மிதவாதி மதவாதியாகிறான்.

*
சந்தர்ப்பவசத்தில் காசுக்காக
அடிமையாகிறான் - அந்த அடிமைத்தனம்
பொதுக்குழுவில் அரசியலாகும்போதும்
தீவிரமடைகிறான்.

*

எழுதியவர் : செல்வமணி (30-Dec-16, 11:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 278

மேலே