ஓலம்
மூன்று வேளை உணவும் இருக்க ஒரு இடமும்
இருந்தால் போதுமென வாழ்க்கையை தொடங்கினேன்
மனைவி வந்தாள்! சொத்து சுகம் வேண்டாமா என்றாள் மனைவி சொல்லே மந்திரம் என்று மாடாய் உழைத்தேன்
பணம் சேர்ந்தது, தேனை மொய்க்கும் வண்டு போல்
துணைவிகளும் சேர்ந்தனர்.
மனைவிக்கு சேர்க்கும்பொழுது
துணைவிகளுக்கும் சேர்க்கவேண்டாமா?
செய்ய கூடாததெல்லாம் செய்தேன்.
இதோ மரணபடுக்கையில் நான்
இறைவன் நாவை அடக்கிவிட்டான்
செவியை மட்டும் விட்டு வைத்துள்ளான்
அறையில் இருள் சூழ்ந்துள்ளது
விளக்கு போடுங்கள் என்று சொல்ல நா இல்லை
மற்றவர்களுக்கு என்னை பற்றி கவலை இல்லை
பணத்திற்காக மோதும் சொந்தங்கள்,
எப்பொழுது கண்ணை மூடுவேன் என காத்திருக்கும் பிள்ளைகள்
இறைவா சொர்கமும் நரகமும் இறந்தபின்
தான் என எண்ணினேன்,
சீராக வாழ்ந்தால் வாழ்வே சுவர்க்கம் தான்
சேறாக வாழ்ந்தால் இறுதியிலும் துயரம் தான்
என்று புரிந்துகொண்டேன்