என் வாழ்க்கை

வாழ்க்கை எனும் வானில்
பறவைகளாக மற்ற உயிர்கள்
பறப்பது போல நானும்
பறக்க நினைத்தேன்
ஆனால்
என்னால் மட்டும் முழுவதுமாக
பறக்க முடியாமல் தவிக்கிறேன்!!!
இதனால்,,
பிறப்பு
என் வாழ்வில் நான் செய்த
தவறு,
இறப்பு
என் வாழ்வில் நான் செய்யப்போகும்
மிகப்பெரிய தவறு,
வெற்றி
என் வாழ்வில் நான் தொடப்போகும்
வேலையில் தொலைவில் போகும்
ஓர் எல்லைக்கல்,
தோல்வி
என்றும் என்னை தொடர்ந்துவரும்
ஒன்று,
இன்பம்
இன்றுவரை இன்றியமையாமல்
இருக்கும் ஒன்று,
துன்பம்
துடிக்கும் இதயத்தோடு சேர்ந்து
இருக்கும் ஒன்று,
கனவுகள்
ஏனோ இன்று வரையும்
கனவுகளாகவே உள்ள ஒன்று,
நினைவுகள்
என்னையும் மீறி மூழ்கி இருக்கும்
ஒன்று
நிகழ்வுகள்
நிழலைப்போல நிலையின்றி
காணப்படும் ஒன்று,
சோகம்
எனக்கு சொந்தமான ஒன்று
கோபம்
என்னை எனக்கே காட்டும்
கண்ணாடி,
கண்ணீர்
என்றும் என்னை விட்டு பிரியாத
ஒன்று,
தனிமை
என்னை நானே உணரும் ஓர்நிலை
நட்பு
இன்று வரை எனக்கு நம்பிக்கையாக
இருக்கும் ஒன்று,
வாழ்க்கை எனும் வானில் பறக்கும்
வேலையில் எத்தனை தடைகள்
வரும் வேலையிலும்
முயற்ச்சி என்ற ஒன்றை மட்டும்
கைவிட மாட்டேன்!
வானின் எல்லை முடியும் வரை
அல்ல
என் மூச்சின் எல்லை முடியும் வரை
..........................................................