புது வருடம்

நிகழ்காலத்தில் காணும் காட்சி பிழைக்கள்
இல்லா புது வருடம் வேண்டும்
வான், தரை, தண்டவாளா விபத்துக்கள்
இல்லா புது வருடம் வேண்டும்
புயல் வெள்ளம்
இல்லா புது வருடம் வேண்டும்
குண்டு வெடிப்புகள் பொறுப்பு ஏற்புகள்
இல்லா புது வருடம் வேண்டும்
ஏப்பொழுதாவது நல்ல தீர்ப்பு வழங்கும்
நீதிமன்றங்கள் கொண்ட
புது வருடம் வேண்டும்
கருப்பு வெள்ளை பண போராட்டத்தில்
சாமானியன் சாகாத
புது வருடம் வேண்டும்

எழுதியவர் : கமலக்கண்ணன் (31-Dec-16, 10:07 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : puthu varudam
பார்வை : 221

மேலே