புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டே ...
வருமாண்டு நமக்கு வளமாய் அமையுமென
வாழ்வோர் மனதில்நீ நம்பிக்கை வளர்ப்பாயோ!
ஏழையின் வாழ்வு ஏணியேர...... ஏன்
ஏழையென்ற இனம் இல்லாது போக
வருமாண்டே நீ வழி சொல்வாயோ!
வயலை கண்டு வாழ்வை மாய்க்கும்
ஏர் உழவனின் வாழ்வு ஏற்றங்காண
காவிரி தாயேநீ கரைபுரன்டு வருவாயோ!
பட்டினி சாவுயெல்லாம் இனி பழங்கதையாக
பாரத தாயேநீ பரிவு காட்டுவாயோ!
மானவ செல்வங்கள் மன இருக்கமின்றி
இயல்பாய், எளிதாய் கல்வி கற்க
கல்வியாளர்களே புதுக்கொள்கை கொணர்வீரோ!
மக்கள் சேவகரெல்லாம் தம்மக்கள் சேவைவிடுத்து
பொதுமக்கள் சேவையே பொதுசேவை என்றுணர்வீரோ!
அற வழியில் பொருள் ஈட்டி
அன்பு வழியில் இல்லம் கண்டு
அகிலத்தில் அணைவரும் இன்புற
புத்தாண்டு வாழ்த்துக்கள்.......