புத்தாண்டு வாழ்த்துக்கள்

மாற்றங்கள் நிகழட்டும்
மனிதம் நிலைக்கட்டும்
ஏழ்மை மறையட்டும்
ஏக்கங்கள் தீரட்டும்
சாதிவெறி ஒழியட்டும்
சாதனைகள் கூடட்டும்
சமயங்கள் இணையட்டும்
சமத்துவம் நிலைக்கட்டும்
அமைதியே நிலவட்டும்
அகிலமே மகிழட்டும்
கனவுகள் நனவாகட்டும்
கல்விவளம் பெருகட்டும்
காழ்ப்புணர்வு நீங்கட்டும்
நட்புணர்வு வளரட்டும்
இன்பம் பெருகட்டும்
இதயங்கள் மகிழட்டும். !!!
பழனி குமார்
1.1.2017