பூங்காற்று

நுட்பமான முறையில் நுண்பொருள் கொண்டும் காண இயலாத மாயவனே
உன்னை உணர என் உணர்விற்கும்
உன் மனநிலையை நுகர்ந்து அறிய என் மூக்கிற்கும் வாய்ப்பளித்த இயற்கையின் எழிலூட்டலே
இந்த ஓர் உலகில் உயிருள்ள உயிரற்ற பல்லுயிர் அனைத்தும் உயிருள்ள உயிரற்ற உன்னை நாடியே
அவைகளின் நாடி இருக்கின்றது உயிரோடு
பூங்காற்றாய் நீ பணி அமர்த்தப்பட்ட நாளில் இருந்து
ஓய்வை வெறுத்தும் உழைப்பில் தன்னை மறந்தும் செயலாற்றுபவனே
மனத்தாலும் குணத்தாலும் சினத்தாலும் நீ நினைத்தாலும் என்று உன்னை உன்னால் மட்டுமே புரிந்திட முடியும்
வானிலை என்ற ஒன்று இருந்தாலும்
அதனால் என்றும் உன் வாழ்நிலை முழுதும் அறிந்திட இயலாது
ஏனெனில் நீ உனக்கு மட்டுமே காண கிடைப்பவன்
உன்னை ஓர் உயிராக நான் நினைக்கையில்
பற்பல நினைவுகள் பூக்கிறது
நீ கோபம் கொண்டால் வீசுகிறாய் சற்று வேகமாக
அமைதி கொண்டால் பேசுகிறாய் என் காதின் ஓரமாக
நீ பம்பரம் போல் சுழன்று விளையாடினால் உன் பெயர் சூறாவளியாம்
சிறிது நேரம் துகில் கொண்டால் நிலவும் வெற்றிட அமைதியாம்
துகில் முடிந்து நீ விழித்தால் நிலவும் சலசலப்பு
சற்று நீ சிரித்தால் சிலுசிலுப்பு
நீ மனம் வருந்தி அழுதால் வீசும் சாரை
காற்று
நீ மணம் கொண்டு வந்தால் வீசும் நறுமண வாடை காற்று
இறுதியில் உன்னை பற்றி என் சிந்தையில் ஒன்று பூத்தது
உன்னை எம்முன்னோர்கள் கண்களால் காண இயலாததால்
காண விழைந்து "காட்டு" என்று பெயரிட்டு அழைத்திருப்பனர்
பின்னாலில் அது பிழையாக மறுவி "காற்று" என்றானது போலும்
இருப்பினும் எம் கண்களால் உன்னை காண நீ மறுக்கிறாய்
அது உன் சிறப்பு
உன்னை காணாமலேயே வாழ்ந்து மடிகிறோம்
அது எங்களின் பிறப்பு!!!!!.....