விவசாயி

பருத்தி பஞ்சை போல்....
ஒரே வண்ணமாய்.....
உலகத்த நீ பாக்குற....
களைய வெட்டி
கஞ்சி குடிக்கிற...
பயிர வளத்து
உசுரு வாழுர...
பருத்தி பஞ்சினில்..
பனி துளியினில் ....
தீயின் உடலினில்...
மாசுண்டா....
வரப்ப வெட்டி
பொழப்பு நடத்துற....
மனச வெட்டி
சுத்தம் காட்டுற. ...
ஆடு மாடு மேல உள்ள
உன் பாசம் தான். ...
உலக அன்பினில் ஒசந்தது...
பயிரு காஞ்சு போச்சுனா...
உயிரே விடும் உத்தமனே....
சோள தட்டையில்...
தொங்கும் கூட்டினில்...
சின்ன குஞ்ச நீயும் பாக்குற. ..
உன் மனசு ஈரத்த காக்க தான்...
அந்த தட்ட விட்டு மிச்சம் அறுக்குற...
கல்லும் முள்ளும். ..
உள்ள பாத தான். ...
அதில் எந்த செருப்பும். ..
அணியா உன் பாதம் தான். ..
இன்னும் பூமி தாயே...
இங்கே மதிக்குதே....

எழுதியவர் : (1-Jan-17, 1:28 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 116

மேலே