இனி என்ன

இனி என்ன அசிங்கம் வேண்டும்?
எல்லா அசிங்கங்களும்
இங்கே நடந்து விட்டன.

கார்த்திகை மாதத்து
நாய்கள் போல
நாக்கைத் தொங்கப்போட்டு
அலையும் இந்த
ஈனப் பிறவிகளை
என்ன செய்யப் போகிறோம்.

பணந்தின்னிக் கழுகுகள்
கூட்டுக் கொள்ளையில்
வாய்பொத்திக் கிடக்கின்றன.

காறித்துப்புகிறேன்;
அருவெறுப்பே
உன் முகத்தைக்கூட
நீ துடைக்கமாட்டாய்.
அத்தனை அசிங்கம் நீ
அத்தனை கேவலம் நீ.

எழுதியவர் : கனவுதாசன் (1-Jan-17, 1:49 pm)
Tanglish : ini yenna
பார்வை : 62

மேலே