​ நீ தான்டி என் உசுரு ​

கிராமியக்கவிதை ​
*******************************

நம்பியெனை வந்தவளே
பத்தரைமாத்துத் தங்கமே !
கரையோரமாக் காத்திருந்து
கண்சிமிட்டாமப் பார்த்தவளே !
பெருமூச்சும் வாங்கிடுமே
கருவிழியும் பூத்திடுமே
​எனைக்கண்ட நொடியிலே !

மறைக்கத்தான் தெரியல
மறக்கவும் முடியலையே
மனசுலபட்டதக் கொட்டியே
எம்மனசில இடம்பிடிச்சியே
மணமுடிக்க வச்சியே !

கட்டிக்கிட்ட நாள்முதலா
வெட்டிப்பேச்சும் நின்னதே !
கண்ணாய் நினைச்சே
என்னையும் பார்த்துக்கறே !
நிறைஞ்ச நெஞ்சோட நீயும்
குறையொன்னும் சொல்லாம
இருக்கியே இதுவரைக்கும் !

கனவெல்லாம் கண்டிருப்ப
என்னவெலாம் ஆசையோ
சொல்லிடேன் உடனடியா
செய்திடுவேன் உனக்காக !
சந்தோசமா வாழ்ந்திடவே
முடிஞ்சதை செய்திடுவேன் !

நாமுந்தான் வாழ்வோமே
நாலுபேர் வாழ்த்திடவே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Jan-17, 8:27 pm)
பார்வை : 926

மேலே