எசப்பாட்டு - 10 இராப்பகலா கழனியிலே
எசப்பாட்டு - 10
இராப்பகலா கழனியிலே
உழைச்சு வுடல் கருத்தாச்சு
களை பறிச்ச கழனி யெல்லாம்
களையிழந்து போயாச்சு
கடன்வாங்கி நாத்துநட்டு
நாள்ப்ல ஆயாச்சு
காவேரி ஆத்தோரும்
நீர்வரத்து குறைஞ்சாச்சு
ஜாதிக்கு ஒதுக்கீடு
பாதிக்கு மேலாச்சு
நீருக்கும் ஒதுக்கீடு
நம்மரசே போட்டாச்சு
காத்திருந்து களப்பறிச்ச
நாளெல்லாம் மறந்தாச்சு
ஆகாயம் பாத்துப் பாத்து
கழுத்து வலி வந்தாச்சு
ஊரில் பாதி விவசாயி
உழுநிலம் வித்தாச்சு
நாம மட்டும் வெச்சிருந்தா
சும்மா நம்ம விடமாட்டான்
கார்பொரேட் காரனுங்க
காலெடுத்து வெச்சாச்சு
காணிநிலம் வித்துப்புட்டா
கைநிறைய காசுவரும்
வாங்கிகிட்டு பேசாம
நாட்டுப்புறம் விட்டுப்புட்டு
பட்டணத்துப் பக்கம் போயி
செட்டிலாவோம் மச்சானே
கடிப்பேய் விடுத்துப்புட்டு
கடிவினை செய்துக்கிட்டோம்
அடியே ஒத்தப்புள்ள பெத்துக்கொடு
படிக்க வெச்சு ஆளாக்க
கடிப்பேய் = அச்சம்
கடிவினை = திருமணம்
- தர்மராஜன் வெங்கடாச்சலம்
02-01-2017