உழவன்
இரவெல்லாம் கண்விழித்து பரிதி கண்டே
வயல் சென்று நெற்பயிரை காத்துநின்று
வரப்பிட்டு நீர்பாய்ச்சி.பசுமையாக்கி
சிறு பொழுதும் துவளாமல் கண்விழித்து
துயரான மக்கள் உண்பதற்க்கே
தூயநவதானியங்கள் விளைபதற்க்கே
அயராது உழைக்கின்ற உழவர் தனை
உழவர்கள் சிந்துகின்ற
வியர்வை கொண்டே
அடி நெஞ்சில் கவிதையது
தோன்றுமென்பேன்
அன்பன்
செல்வம் திருவண்ணாமலை