அவள் ஒருத்திதீ

முட்களை மலர்களாக சுட்டெரித்து
பூ மாலையாக தன் இதயத்தில்
வாகை சூடிக்கொண்ட என்னவள்
எரிமலையில் ஒருத்தி(தீ)...!

விழிப்பார்வையில் காலனை
கலங்கடித்து பாசக்கயிறை
தன் தாலிக்கயிறாய்
இதயத்தில் சுமப்பவள்...!

நட்புக்கு அன்பு அறையும்
கள்வனுக்கு கல் அறையும்
மழலை சிரிப்போடு
பாரபட்சம் இன்றி மோட்சத்தை
அழகாய் தருபவள்...!

அவள்மீது காமப்பார்வை படும் முன்னே
அவனின் ஆயுள் முடிந்திருக்கும்
இல்லை தங்க கரத்தால் முடிக்கப்பட்டிருக்கும்
இவளே தூய மனதால் பொங்கும் ஒருத்தி(தீ)...!

யுகம் யுகமாய் அன்பை தொடர
இதயத்தில் வியூகம் அமைத்து
மூச்சோடு என் மூச்சு கலந்து
தொடுப்பேன் உன் உதிரத்தில்
முடிப்பேன் என் உயிரை
உன் ஆயுள் தடத்தில்....!

*********************************************
ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (2-Jan-17, 4:57 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 124

மேலே