உடல் வலிமை

சுகமான வாழ்விற்கு உடல்நலம் தேவை
இதமான நாட்களுக்கு ஆரோக்கியம் தேவை
ஆரோக்கியம் பேணுவதற்கு உடற்பயிற்சி தேவை
பயிற்சிகள் அளித்திடும் வரமே உடல்வலிமையாகும்...

போரிடும் நாட்கள் இன்று இல்லை
திரைப்படம் போல் ஏதும் சண்டையில்லை
அடிதடி யாருக்கும் பழக்கம் இல்லை
இருந்தாலும் உடல்வலிமை கொண்டிருத்தல் சுகமே..

சாப்பாட்டுக் கட்டுப்பாடு அதற்கு தேவை
சலிக்காத உடற்பயிற்சி மிகவும் தேவை
ஆரம்பித்த பயிற்சிகளை கைவிடாது தொடர்ந்திருத்தல்
மிகமிக முக்கியமாய் என்றும் தேவை

சீறும் காளையை அடக்கப் போவதுமில்லை
இளவட்டக்கல்லை தூக்கினாலே திருமணம் என்பதில்லை
உடல்வலிமை மிகக் கொண்டிருந்தால் வாழ்வில்
மனவலிமை கூடத்தானாய் வந்திடும் தானே

அதனால் உணவு பழக்கவழக்கம் சீராகும்
தைரியம் ஓடிவந்து மனதில் அமர்ந்துகொள்ளும்
வீணான செயல்களில் ஈடுபாட்டை விட்டு
உடற்பயிற்சி செய்வோம் உடல்வலிமை பெறுவோம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-17, 11:01 pm)
Tanglish : udal valimai
பார்வை : 478

மேலே