இளம்பிஞ்சு

இளம்பிஞ்சு சலங்கையின் கீதம்
இசைத்திடுதே புதுப்புது ராகம்
பலமாக நம்மிதயத்தை திறந்து
ஓட்டிடுதே நம்முள்ள சோகம்

பொக்கைவாய் சிரிப்பதும் அழகு
பூப்போன்ற முகமதி அழகு
மென்மையான கைகளும் அழகு
எட்டியுதைக்கும் கால்களும் அழகு

புரியாத மழலையும் சுகமே
அன்பான அழுகையும் சுகமே
தெரியாத நபரினைக் கண்டால்
சிரிக்கின்ற தைரியம் சுகமே

தவழ்ந்தோடும் வீட்டினில் மெதுவாய்
நிலைநாட்டும் சிறு ராஜ்ஜியத்தை
சிரிப்பென்னும் கவிதைகள் படைத்து
துரத்திவிடும் வரும் துன்பங்களை

இன்பத்தின் அர்த்தம் மழலைதானோ
சாரலாய் அன்பை பொழிகிறதே
ஆசையின் பரிசு குழந்தைதானோ
தென்றலாய் அன்பால் தழுவிடுதே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-17, 10:53 pm)
பார்வை : 51

மேலே