கைம்பெண்

கணவனை இழந்த நான் , பூவையும் இழந்தேன்
பொட்டையும் இழந்தேன் , அணியும் புத்தாடைகளையும் இழந்தேன்
என்னவர் நர்ச்சகுனமாகக் கண்ட என்னை அபசகுனமாக்கினார்.

ஏன் என் உயிரை மட்டும் பறிக்கமறந்தனர்?
உடன்கட்டை ஏறும் பழக்கம் மறந்ததாலா அல்லது
அனுதினமும் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும்
என எண்ணியதாலா? புரியாமல் தவிக்கிறேன் கைம்பெண்ணாக ....

எழுதியவர் : விக்னேஷ் பழனி (5-Jan-17, 10:08 pm)
சேர்த்தது : விக்னேஷ் பழனி
பார்வை : 184

மேலே