என் நிலை இதோ
"தோல்வி" நெஞ்சில் விழுந்ததே
நான் தோற்றுப்போனேனா
தடம் தெரியாமல்
தொலைந்து போவேனோ...
வந்தது யாவும் வலியே
வாழ்வே சோகம் ஆனதே
வயிறும் என்னால் ஏமாற்றம்
கண்டது கடவுளே
கொடுமையிலும் கொடுமை ஏனோ?
வாழ்வில் வந்தது வறுமை தாணடா
கால்களும் என்னை சுமக்க மறுக்கும்
கேவலம் நேர்ந்த ஜீவனும் உடைந்ததே...
வேண்டாம் வேண்டாம் !
வறுமை வேண்டாம்!
வலிகள் வேண்டாம்!
வேதனை வேண்டாம்!
இடம் இல்லை இதயத்தில்
இன்னும் வந்தால்
மிச்சம் இருக்கும் உயிரும்
என்னை கொன்று விடும்...
தூக்கிச் செல்ல யாருமில்லை
தோண்டி புதைக்க இடமில்லை
சுட்டெரிக்க தீயுமே
என்னை தீண்டாது தோழனே...
எமனும் கூட்டிச் செல்ல வருவானோ
அதற்கும் ஏதும் தகுதி வேண்டுமோ
என்னால் யாருக்கும் பயனில்லை
என்பானே எமனும் கேளிக்கையோடு
ஆரம்பம் ஒன்று ஆயுளில் கொடுத்தாள்
அன்னை அவளும் வேதனை கொண்டால்
தொட்டால் பாவம் என்றதே
தென்றல் தூக்கி சென்ற
துசும் தூரம் போனதே...
காற்றும் என்னை தழுவி போனால்
தூரம் நின்று மூக்கை பொத்துமே
பாவி தானிவன் பூமியில்
இவன் யாரோ எவனோ பேசாமல்
ஒதுங்க சொல்லுதே ...