ஆதங்கம்

வறண்டநிலம், வாடியபயிர்கள், கானல்நீர் என
துளிநீருக்காய் துளிரமருக்கும் குறுத்துகள்...

துவண்ட விவசாயி, தளர்ந்த கால்நடைகள், புதியதாய் தாம்புக்கயிறு என
பரம்பரை கொத்துக்களோடு பகிரமுடியா துக்கம்...

வழுக்கைதலை, கொழுத்ததேகம், தலைக்கனச் சொல்லாடல் என
பழுத்துவிழும்நேரத்திலும் பருவமங்கைதேடும் பரதேசி...

கந்தலுடை, இளைத்ததேகம், வலுவிழந்த மூச்சுக்காற்று என
மங்கியகுரலில் மாசற்று இறைதேடும் பிச்சைக்காரி...

ஏன் ஒளிந்துகொண்டாள் என் தமிழன்னை
எங்கு மறைத்துவைத்திருக்கிறாள் எம் தமிழ்மண்ணை...!

#கண்டவைகளெல்லாம்_கனவாகிடாதா_தமிழன்னையே

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (6-Jan-17, 7:47 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 85

மேலே