வர்தாவின் நிலை-ஒரு புது ஒப்பந்தம்

என் இயற்கை தோழியே....
உன் மீது உனக்கென்ன கோபம்.?
என் மானுடம் உனை சிதைப்பது போதாதென்றா,நீயும் உனை அழித்துக்கொள்கிறாய்.
வளியே!
இச்சீற்றத்தால் உனக்குத்தான் வலியே...
என் தேவதை உன் மரக்கால்கள் உடைந்து போயின...
நீ தந்த மரக்காகிதங்கள் கிழிந்து போயின....
உன்னாலான என் சுவாசம் மாசானது....
ஒளியின் கீதம் இருளானது...
சுவாசமே....!
உன் கோபம் எமக்கு விடுமுறை அளிக்கவும்.....விபரீதம் அளிக்கவும் தானென்றால்,
தென்றலாய் மழையோடு நின்றிருக்கலாமே!?
மின் வெட்டு,குளிர்காற்று,போக்குவரத்து தடை,என மானுடத்தினும்,
உன் மூத்த குந்தைகளான சிற்றுயிர்களின் கூரைகளல்லவா குளைந்துவிட்டன......
எம் மானுடமெல்லாம்,
அவரவர் வேலை பார்க்க
உன்னால் வெட்டப்பட்ட உன் கால்களை வேடிக்கைப்பார்த்து
முனுமுனுத்துக் கொண்டே
அவரவர் காலால் நடைபோடுகின்றன.....
புரியாத உன் புலம்பல்கள்...... மழையாய் கண்ணீர் விட்டு
கடலாய் கொந்தளித்து
நிலத்தை நடுங்க வைத்து
புயலாய் எழுந்து
பிழம்பாய் உருகும் உனைப்பற்றி கவலைப்பட ஒருவருமில்லை....
அவரவர் கவலையை சுமக்கவே முடியாமல் இருக்கும் எம் மானுடம்,
பூகம்பங்களாகவும்,
சுனாமியாகவும்,
புயலாகவும்,
சூரியக் கதிராகவும் மட்டுமே
நீ வரும் வரை மாறாது.....
நீயாவது மாறி வா ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு..........

எழுதியவர் : மீனாட்சி (9-Jan-17, 10:17 pm)
பார்வை : 108

மேலே