பட்டமரம்

திடீர் கவிதை !!! - மரபு கவிதை


பட்டமரம் செழித்திடுமா ?
------ பக்குவமாய் வளர்ந்திடுமா ?
நட்டவர்கள் காணவில்லை
------ நலம்கெட்டு நிற்கின்றாய் !


விட்டுவிட்டக் கைம்பெண்ணாய்
------ விதவைகோலம் பூண்டுள்ளாய்!
தொட்டுவிடும் தூரத்தில்
------ தொடுவானம் பதில்சொல்லும் .


கட்டுடலைக் கொண்டதோர்
------ காளையினைப் போன்றேநீ
எட்டிநின்றுப் பார்க்கின்றாய்
------- என்செய்வாய் நீயுந்தான் !


நட்டுவைத்தால் மரமாகி
------ நாட்டுநலன் பேணிடுவாய் !
மட்டில்லா வான்மழையும்
------ மண்ணுலகில் பெய்திடுமே !


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 10-Jan-17, 2:02 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 42
Close (X)

0 (0)
  

மேலே