ஒரு காகிதத்தில் சில ஓவியங்கள்
ஒரு காகிதத்தில் சில ஓவியங்கள் !
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினார் வள்ளலார்.
மழை மேகங்களே.... நீ !
வெளிச்சம் தேடியதில்
உருகிக் கிடக்கின்றன
மெழுகுத் துகள்கள் !
அருவியிலிருந்து நீர்
கீழே விழுந்தாலும்
நதியாக ஓடுகிறது
ஆனால் நீ.....?
நாயின்
வால் அசைவில்
நன்றியின் உணர்வு !
விதவை
விற்கும் கூடையில்
நிறைய மலர்கள்
அவள்
கூந்தலோ வெறுமை !
போகிப்பண்டிகையில்
பொசுக்க முடிவதில்லை
காதல் சின்னங்களை !