இலவசம் என்னும் வசியம்

இலவசம் என்னும் வசியம்!
இலவசம்...
ஏழை எளியவர்கள்
நடுத்தர மக்கள்
வசதியுள்ளவர்களை
வசியம் செய்து
விழ வைத்து
வேடிக்கை பார்க்கும்
மாய வலை !
இலவசங்கள்
உழைப்பாளர்களை
வசியம் செய்து
சோம்பேறியாக்கும்
சாவு மணிகள் !
ஏழை மக்களை
கவரும் தங்கமுலாம்
பூசப்பட்ட கவரிங்நகைகள் !
இலவசப் பொருட்கள்
மணமிக்க மலர்களிடையே
காணப்படும் காகிதப்பூக்கள் !
கிணற்று நீரில்
மிதக்கும் முழுநிலவு !
பாலைவனத்தில் தெரியும்
கானல்நீர் !
இலவசங்கள்
நாடகம் சினிமாக்களில்
அரிதாரம் பூசிக்கொண்டு
அரியணையில் வீற்றிருக்கும்
ராஜாராணி வேஷங்கள்.!
இலவசங்களால்
வசியம் செய்து
வாக்காளார்களின்
மனசாட்சியை
பூட்டி வைக்கும்
சாவியில்லா பூட்டுகள் !
இலவசங்கள்
அரசியல்வாதிகள்
கொள்ளையடிக்க
அப்பாவி மக்களுக்கு
தூக்கி எறியும்
எலும்புத் துண்டுகள் !
இலவசங்கள்
நாட்டின் பொருளாதாரத்தை
நாசமாக்கும்
சரிய வைக்கும்
பூகம்பங்கள் !
இலவசம்
காஞ்சிப்பட்டு உடுத்தி
கை நிறைய
தங்க வளையல் மின்ன
கழுத்தில் வைரமாலைகள்
ஒட்டியாணம் ஜொலிக்க
உதட்டில் புன்னகையுடன்
காணப்படும்
அழகிய ஓவியம் !