தை மகளே வருக

மார்கழியின் தோழியே
மாசியின் அன்ணையே
தமிழின் தனிமகளே
தமிழனின் திருமகளே
எங்கள் தைமகளே
வருக வருக

ஆடியில விதைவிதைத்து
ஐப்பசியில் களையெடுத்து
கார்த்திகையில் கண்விழித்து
மார்கழியில் கதிரறுத்து
மண்பானைக்கு மஞ்சள்கட்டி
பக்குவமாய் வெல்லமிட்டு

பொங்கிவரும் பொழுதினிலே
பயிரை பரிசளித்த
பரிதிக்கு பொங்கலிட்டு
வணங்குமிந்த திருவிழா
வண்ணமிகு ஓர்விழா
தைபொங்கலெனும் பெருவிழா

வய காட்டில் தோழனாய்
வாழுமெங்கள் வீட்டினிலே வீரனாய்
குடும்பஅட்டை ஏறா குழந்தையாய்
கழனிதிருத்தி கட்டைவண்டி இலுக்கும்
வீரனுக்கு ஒருவிழா மாட்டு
பொங்கல் எனும் திருவிழா

இயற்கைக்கும் எருதுக்கும்
நன்றியறிவிக்கும் நல்லதொரு விழா

தைமகளே உந்தன் வரவாலே
காவிரி பெருக்கெடுத்து
கழனியெல்லாம் கதிர் விளைந்து
உழவரின் வாழ்வு உய்வுபெறவும்
வீரமிகு காளையை விவேகத்துடன் பிடிக்கும்
ஏருதழுவுதல் ஊறுயின்றி நடைபெற
வாழ்த்தும்......

எழுதியவர் : கலியபெருமாள்.கோ (13-Jan-17, 1:16 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : thai magale varuka
பார்வை : 1204

மேலே